

கோவிட்-19 தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 16.25 கோடியை இன்று கடந்துள்ளது. 12 மாநிலங்களில் 18-44 வயதில் 9,04,263 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் கோவிட்-19 நிவாரண மருத்துவ கருவிகள் மற்றும் உபகரணங்களை சர்வதேச சமூகத்திடமிருந்து இந்திய அரசு பெற்று வருகிறது. இதுவரை இவ்வாறு கிடைக்கப்பெற்ற அனைத்து பொருட்களும் மாநிலங்கள்/ நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலானவை விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இவை, தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளாகும்.
இதுபோன்ற சவாலான தருணத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அனைத்து உதவிகளையும், ஆதரவையும் வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
மறுபுறம், நாட்டின் மூன்றாவது கட்ட தடுப்பூசித் திட்டம் விரிவடைந்திருப்பதை அடுத்து, இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 16.25 கோடியை இன்று கடந்துள்ளது.
12 மாநிலங்களில் 18-44 வயதில் 9,04,263 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு (6,415), சத்தீஸ்கர் (1,026), டெல்லி (1,29,096), குஜராத் (1,96,860), ஜம்மு காஷ்மீர் (16,387), ஹரியாணா (1,23,484), கர்நாடகா (5,328), மகாராஷ்டிரா (1,53,966), ஒடிசா (21,031), பஞ்சாப் (1,535), ராஜஸ்தான் (1,80,242), உத்தரப் பிரதேசம் (68,893) ஆகிய மாநிலங்கள் பயனடைந்துள்ளன.
இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட அறிக்கையின்படி 29,34,844 முகாம்களில் 16,25,13,339 தடுப்பூசிகள் நாடுமுழுவதும் செலுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள மொத்த டோஸ்களில் 66.87 சதவீதம், 10 மாநிலங்களில் பதிவாகியுள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் 19 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தடுப்பூசித் திட்டத்தின் 110-வது நாளன்று (மே 5, 2021) 19,55,733 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 15,903 முகாம்களில் 8,99,163 பயனாளிகளுக்கு முதல் டோஸும், 10,56,570 பயனாளிகளுக்கு இரண்டாவது டோஸும் போடப்பட்டன.
கோவிட் தொற்றிலிருந்து இந்தியாவில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 1,72,80,844 ஆக இன்று பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 3,29,113 குணமடைந்தனர். புதிதாக குணமடைந்தவர்களில் 74.71 சதவீதத்தினர், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
ஏப்ரல் மாதத் துவக்கத்தில், 53,816 ஆக இருந்த ஒரு வாரத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை, ஏப்ரல் மாத இறுதியில் 3 லட்சத்தைக் கடந்தது (3,13,424).
கடந்த 24 மணி நேரத்தில் 4,12,262 புதிய பாதிப்புகள் நாட்டில் பதிவாகியுள்ளது. இதில் 72.19 சதவீதம், 10 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 57,640 பேரும், அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் 50,112 பேரும், கேரளாவில் 41,953 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் கரோனா தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 35,66,398 ஆக அதிகரித்துள்ளது. இதில் 81.05 சதவீதம், 12 மாநிலங்களில் பதிவாகியுள்ளது. தேசிய உயிரிழப்பு வீதம், 1.09 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 3.980 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 75.55 சதவீதத்தினர், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 920 பேரும் உத்தரப் பிரதேசத்தில் 353 பேரும் நேற்று உயிரிழந்தனர்.
டாமன் டையூ, தாதர் நாகர் ஹவேலி, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், லடாக் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்றின் காரணமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.