

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத பாதிப்பாக 4,12,262பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கரோனா ஒட்டுமொத்த பாதிப்பு 2,10,77,410ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,12,262 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,10,77,410ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்து இருந்த தினசரி கரோனா தொற்று இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவிலிருந்து 1,72,80,844பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 3,29,113பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 35,66,398 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 3,980 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 23,01,68 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை மொத்தம் 16,25,13,339பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.