முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங்  கரோனாவுக்கு பலி

முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங்  கரோனாவுக்கு பலி
Updated on
1 min read

முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவருமான சவுத்ரி அஜித் சிங் இன்று கரோனாவால் உயிர் இழந்தார். அவருக்கு வயது 82.

அஜித் சிங் கரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி அருகே குர்கானில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருடைய உடல் நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆயினும், சிகிச்சை பலனின்றி இன்று அஜித் சிங் மரணம் அடைந்தார். இதனை அவரது மகனும் ராஷ்ட்ரீிய லோக்தளக் கட்சியின் மூத்த தலைவருமான ஜெயந்த் சவுத்திரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அஜித் சிங்கின் மனைவி பெயர் காயத்ரி தேவி. இவருக்கு மகனும் இரு மகள்களும் உள்ளனர்.

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் மகனான அஜித் சிங் 1939 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி பிறந்தார். சரண் சிங் உருவாக்கிய லோக்தளம் கட்சி ஜனதாவில் இணைந்து பின்னர் இவரது காலத்தில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியாக உருவெடுத்தது. அதன் நிறுவனத் தலைவராக இருந்து வந்தார். மத்திய அமைச்சராக நான்கு முறை பணி புரிந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் விபி சிங், வாஜ்பாய், நரசிம்மராவ், மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரது ஆட்சியில் மத்திய அமைச்சராக அஜித் சிங் பணியாற்றினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in