

2009ஆம் ஆண்டு டெஹ்ராடூனிற்கு வேலை தேடிச் சென்ற ரன்பீர் சிங் என்ற நபரை திருடியதாகப் புகார் கூறி கைது செய்தனர் போலீசார். விசாரணையில் இருந்த ரன்பீர் சிங் போலீஸ் காவலில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
இந்த வழக்கில் 17 போலீசாரும் குற்றவாளிகள் என்று டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. ஒரே வழக்கில் 17 போலீசாரும் குற்றவாளிகள் என்று அறிவித்திருப்பது நாட்டில் முதல் முறை என்று கூறப்படுகிறது. இவர்கள் மீது கடத்தல், சதி, கொலை மற்றும் சாட்சிகளை அழிப்பது என்ற பல பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.
திங்களன்று 17 போலீசாருக்கான தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.
மேலும், ரன்பீர் சிங்கைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும் 17 போலீசார் மீது நீதிபதி மாலிக் குற்றம்சாட்டினார்.
இந்த வழக்கு உத்தராகண்ட் மாநிலத் தலைநகர் டெஹ்ராடூனில் நடைபெற்று வந்தது. ஆனால் அங்கு நீதி கிடைக்காது என்று ரன்பீர் சிங்கின் தந்தை ரவீந்திர சிங் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து டெல்லி இந்த கொலை வழக்கு மாற்றபட்டது.