தமிழகத்திற்கு 71,03,950 கரோனா தடுப்பூசி; 8.83 சதவீதம் வீணானது

தமிழகத்திற்கு 71,03,950 கரோனா தடுப்பூசி; 8.83 சதவீதம் வீணானது
Updated on
1 min read

தமிழகத்திற்கு இதுவரை 71,03,950 கரோனா தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 8.83 சதவீதம் வீணானதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவிததுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவிததுள்ளதாவது:
அடுத்த மூன்று நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 36,37,030 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக அளிக்க உள்ளது.

இதுவரை, 17.02 கோடி (17,02,42,410) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இன்று காலை எட்டு மணி வரையிலான நிலவரப்படி, 16,07,94,796 டோஸ் தடுப்பு மருந்து (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

94,47,614 கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளன.

தமிழகத்திற்கு இதுவரை 71,03,950 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 8.83 சதவீதம் வீணானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, 67,83,227 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 3,20,723 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்தின்வசம் கையிருப்பில் உள்ளன. 1,00,000 தடுப்பூசி டோஸ்கள் விரைவில் அளிக்கப்பட உள்ளன.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in