Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

நாட்டில் முதன்முறையாக ஹைதராபாத்தில் 8 சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதி

ஹைதராபாத்

நாட்டில் முதன்முறையாக ஹைதரா பாத் தேசிய மிருககாட்சி சாலையில் 8 சிங்கங்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள நேரு தேசிய மிருக காட்சி சாலையில் 12 சிங்கங்கள் உள்ளன. தற்போது ஹைதராபாத்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் கடந்த 2-ம் தேதி மிருககாட்சி சாலை மூடப்பட்டது. இங்கு 40 ஏக்கரில் சஃபாரி ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இதில் உள்ள சிங்கங்கள் கடந்த 4 நாட்களாக சரிவர உணவு உண்ணாமலும் மூக்கில் நீர் கசிந்த படியும் லேசான இருமலுடனும் காணப்பட்டன. இதனால் இவற் றுக்கு கரோனா இருக்குமோ என்ற சந்தேகம் மிருககாட்சி சாலை நிர் வாகிகளுக்கு ஏற்பட்டது. இதை யடுத்து கரோனா அறிகுறிகள் இருந்த 4 ஆண் சிங்கங்கள் மற் றும் 4 பெண் சிங்கங்களிடம் தொற் றுக்கான மாதிரி எடுக்கப்பட்டு, மூலக்கூறு உயிரியல் மையத்தில் (சிசிஎம்பி) பரிசோதனை செய்யப் பட்டது. இதில் 8 சிங்கங்களுக்கும் கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த 8 சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டன.

சிங்கங்களின் எச்சில் மாதிரி களை பரிசோதனை செய்த சிஎஸ்ஐஆர் அமைப்பின் ஆலோ சகர் ராகேஷ் மிஸ்ரா கூறும் போது, "சிங்கங்கள் நெருக்கமாக வாழ்ந்திருப்பதால் தொற்று ஏற் பட்டிருக்கும். சிங்கங்களின் மலத் தையும் எடுத்துப் பரிசோதிக்க முடிவு செய்துள்ளோம். இந்த 8 சிங்கங்களின் உடலில் இருந்த வைரஸ்களும் உருமாறிய கரோனா வைரஸ்கள் அல்ல. சிங்கங்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. சிங்கங்கள் நன்றாகச் சாப்பிடுகின்றன. நலமாக இருக்கின்றன" என்றார்.

மனிதர்களிடமிருந்து சிங்கங் களுக்கு கரோனா தொற்று பரவி யிருக்கலாம் என கருதப்படுகிறது. நம் நாட்டில் சிங்கங்களுக்கு கரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது இதுவே முதன்முறை யாகும்.

இதற்கு முன், கடந்த ஆண்டு ஏப்ரலில் நியூயார்க்கில் உள்ள ஒரு மிருககாட்சி சாலையில் 8 புலி மற்றும் சிங்கங்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x