

*
கனமழையால் வெள்ளக்காடாகி யுள்ள சென்னை தனி தீவு போல காட்சி அளிக்கிறது. அதன் வெள்ள பாதிப்பால் பாழாகியுள்ள சென்னை நகரின் நிலைமை மிகவும் அச்சமூட்டுவதாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தெரிவித்தார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசத்தில் கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை தொடர்பாக மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் ராஜ்நாத் சிங் பதில் அளித்து பேசியபோது கூறியதாவது:
அனைத்து மாநில, தேசிய நெடுஞ்சாலைகளும் வெள்ளத் தால் துண்டிக்கப்பட்டு சென்னை நகரமானது தனிதீவு போல் நிற் கிறது. சென்னை மாநகரில் மிகப் பெரிய அளவில் பேரழிவு ஏற்பட்டுள் ளது. உறுப்பினர்களின் வேதனை புரிகிறது. கடந்த 100 ஆண்டில் இல்லாத அளவுக்கு இடைவிடாது கன மழை பெய்து, முன்னெப் போதும் இல்லைத நெருக்கடியான நிலையில் சென்னை உள்ளது.
டிசம்பர்-2ம் தேதி காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 330 மில்லிமீட்டர் மழை சென்னையில் பெய்துள்ளது. பொதுவாக டிசம்பர் முழுவதிலுமே 250 மிமீ மழைதான் பெய்யும். இதுதான் உண்மை நிலவரம்.
தமிழகத்தில் 269 பேர், புதுச்சேரி யில் 2 பேர், ஆந்திரத்தில் 54 பேர் கனமழைக்கு பலியாகி உள்ளனர்.
கடற்படையிலிருந்து 12 படகு கள், 155 வீரர்கள் மீட்பு நடவடிக் கையில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையி லிருந்து 14 குழுக்களை அனுப்பி விமானப்படையும் மீட்பு பணியில் இறங்கியுள்ளது. மாநில அரசு நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ. 8481 கோடி கோரியுள்ளது. மத்தியஅரசு ரூ 940.92 கோடி வழங்கியுள்ளது.
மழை, வெள்ளச்சேதம் தொடர் பாக மத்திய குழு விரைவில் அறிக்கை தரும் என எதிர்பார்க் கப்படுகிறது. அது கிடைத்தவுடன் கூடுதல் நிதி உதவி வழங்கப்படும்.நிலைமையின் தீவிரத்தை புரிந்து பிரதமர் மோடியும் நானும் தமிழக முதல்வருடன் தொடர்பு கொண்டு பேசினோம். ஆந்திர முதல்வர், புதுவை முதல்வருடனும் நான் தொடர்புகொண்டு பேசினேன்.
ஆந்திர அரசு 1,000 கோடி ரூபாய் இடைக்கால நிவாரணம் கோரியுள்ளது, விரைவில் அங்கு மத்தியகுழு சென்று பார்வையிடும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் மேற்கு வங்கத் துக்கு ரூ.387 கோடி நிவாரண உதவி வழங்கப்படுவதாக ராஜ்நாத் சிங் கூறியபோது திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் கோபமுற்று வெளி நடப்பு செய்தனர்.
வெங்கய்ய நாயுடு உறுதி
மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் வெள்ள நிலைமை குறித்து பிரதமர் மற்றும் உள் துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன். மத்திய அரசு அனைத்துவிதமான உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்த உதவி தொடரும். கடற் படை, ராணுவ உதவியும் வழங்கப் பட்டுள்ளது. ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள் ளன. இந்த உதவியை, நிலைமை சற்று மேம்பட்டால்தான் அளிக்க முடியும். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் சென்று உதவு கிறோம். மக்கள் அங்கு நல்ல நிலையில் இல்லை. முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிக அளவு பாதிக்கப் பட்டுள்ளனர். இயன்ற அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. சென்னைவாசிகள் ஒரு வருக்கொருவர் உதவிவருவதை பாராட்டுகிறேன்” என்றார்.