

‘‘சமூக ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை, நாட்டில் இடஒதுக்கீடு தொடர வேண்டும். அதை ரத்து செய்யக் கூடாது. ரத்து செய்வதை ஆர்எஸ்எஸ் ஆதரிக்காது’’ என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
‘இடஒதுக்கீட்டை மறுபரி சீலனை செய்ய வேண்டும். அந்த நடைமுறை தேவையா என்பது குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும்’ என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கடந்த அக்டோபர் மாதம் கூறினார். இதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், அக்டோபரில் நடந்த பிஹார் சட்டப்பேரவை தேர்தலி லும் பாகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் ஐக்கிய ஜனதா தள கூட்டணியினர் தீவிர பிரச்சாரம் செய்தனர். அந்த தேர்த லில் பாஜக கூட்டணி தோல்வி அடைந்தது. இந்நிலையில், இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்று பாகவத் கூறியிருப்பது அனைவரை யும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
நாக்பூரில் நேற்றுமுன்தினம் இரவு, ‘சமூக ஒற்றுமை’ குறித்து கருத்தரங்கு நடந்தது. அதில் பாகவத் பேசியதாவது:
சமூக ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை, நாட்டில் இடஒதுக்கீட்டு முறை தொடர வேண்டும். இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் திட்டத்தை ஆர்எஸ்எஸ் ஆதரிக்காது. இடஒதுக்கீடு ரத்து என்ற கேள்விக்கே இடமில்லை.
சமூக ஒற்றுமை என்பது முதலில் தன்னிடம் இருந்து தொடங்க வேண்டும். அது பிறகு குடும்ப ஒற்றுமையாக மாற வேண்டும். குடும்ப ஒற்றுமை சமூக ஒருமைப்பாடாக வேண்டும்.
சமூகத்தில் உள்ள வேற்றுமை களை மதிக்க கற்றுக் கொள்வதன் மூலம் சமூக ஒற்றுமையை உரு வாக்க வேண்டும்.மனிதர்களுக் குள் பாரபட்சம் காட்டுவதை எந்த மதமும், ஞானிகளும் ஆதரிக்க வில்லை. இவ்வாறு மோகன் பாகவத் கூறினார்.