இந்தியா
பிரேசில் வகை கரோனாவுக்கும் பயனளிக்கும் கோவாக்சின்
கரோனாவுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்துடன் (ஐசிஎம்ஆர்) இணைந்து ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. தற்போது நாட்டில் காணப்படும் பிரிட்டனின் பி.1.1.7 வகை வைரஸ், மகாராஷ்டிராவின் இரட்டை உருமாற்ற பி.1.617 வைரஸ் உள்ளிட்ட பல்வேறு வகை கரோனா வைரஸுக்கு இந்த தடுப்பூசி பயனுள்ளதாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் ஐசிஎம்ஆர் மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், பி.1.1.28.2 என்ற பிரேசில் வகைகரோனாவுக்கு எதிரான நோய்எதிர்ப்பாற்றலையும் கோவாக்சின்உருவாக்குவது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. பிரேசில் மற்றும் உலகின்சில இடங்களில் இந்த வைரஸ் காணப்படுகிறது.
