

உலகின் முன்னணி பார்மா நிறுவனமான பைசர், இந்தியாவுக்கு கரோனா நிவாரண உதவியாக ரூ.510 கோடி மதிப்பிலான மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது. இது பைசர் நிறுவன வரலாற்றில் வழங்கப்பட்ட மிகப்பெரிய நிவாரண முயற்சி என்று அந்நிறுவனத்தின் தலைவர் ஆல்பர்ட் போர்லா கூறியுள்ளார்.
இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் கரோனா பரவல்கவலை அளிக்கிறது. இந்தியர்கள் அனைவரின் நலன் மீதும்எங்களுக்கு அக்கறை உள்ளது.இந்தியா கரோனா நெருக்கடியில் இருந்து மீண்டுவர பைசர் கைகோர்க்க தயாராக இருக்கிறது.
எனவே ‘‘இந்தியாவுக்கான கரோனா நிவாரண முயற்சியில் எங்களுடைய நிறுவனத்தின் விநியோக மையங்களிலிருந்து ரூ.510 கோடி மதிப்பிலான மருத்துவ உதவிகள் இந்தியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பைசர் நிறுவனத்தின் வரலாற்றில் இது மிகப்பெரிய நிவாரண முயற்சியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது’’ என்று ஆல்பர்ட் போர்லா கூறினார்.
அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பைசர் நிறுவனத்தின் விநியோக மையங்களிலிருந்து மருத்துவ உதவிகள் அனுப்பப்படுகின்றன. இந்த உதவிகள் நாடுமுழுவதுமுள்ள பொது மருத்துவமனைகளில் மருந்து தேவைப்படுகிற கரோனா நோயாளிகளுக்கு இலவசமாக சென்றடைய வேண்டும் என்பதுதான் பைசர் நிறுவனத்தின் திட்டம் என்றும் போர்லா கூறினார். இந்திய அரசு மற்றும் என்ஜிஓ அமைப்புகளின் உதவியால் எங்கெல்லாம் மருந்துகளின் தேவை உள்ளது என்பதை அறிந்து விநியோகம் செய்யும் முயற்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.