Last Updated : 23 Dec, 2015 08:34 AM

 

Published : 23 Dec 2015 08:34 AM
Last Updated : 23 Dec 2015 08:34 AM

ஹைதராபாத்திலிருந்து அமெரிக்கா செல்ல முயன்ற 19 மாணவர்கள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

அமெரிக்கா செல்ல முயன்ற 19 இந்திய மாணவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஹைதரா பாத் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அமெரிக்காவின் 2 பல்கலைக்கழகங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் இவர்களை தங்கள் விமானத்தில் ஏற அனு மதிக்கவில்லை.

இது தொடர்பாக இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலிபோர்னியாவில் சான் ஜோஸ் என்ற இடத்தில் உள்ள Silicon Valley university, ஃபிரெமான்ட் என்ற இடத்தில் உள்ள North Western Polytechnic College ஆகியவை தங்கள் ஆய்வில் உள்ளதாக அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகமை சார் பில் எங்களுக்கு கடந்த 19-ம் தேதி தகவல் அனுப்பியுள்ளது. ஏற் கெனவே இதே பல்கலைக்கழகங் களில் சேருவதற்காக ஏர் இந்தியா விமானத்தில் சென்ற 14 மாணவர் கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக் கப்படவில்லை. சான்பிரான்ஸ்கோ விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப் பட்டனர். எனவே இம்முறை மாணவர்களுக்கு ஏற்படும் அசவுகரியம் மற்றும் பயணச் செலவை தவிர்க்கும் வகையில் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட வில்லை. இம்மாணவர்களுக்கு முழுக் கட்டணமும் திரும்ப அளிக் கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவின் அமெரிக்க அலுவலகம் அனுமதி வழங்கியவுடன் இந்த மாணவர் கள் அமெரிக்கா செல்ல எங்கள் விமானத்தில் அனுமதிக்கப்படு வார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்களில் இருவர் கூறும் போது, “நாங்கள் குற்றவாளிகள் போல் நடத்தப்பட்டு, திருப்பி அனுப் பப்பட்டோம். அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை சார்பில் எங்களுக்கு விசா வழங்கப்பட் டுள்ளது. அந்தப் பல்கலைக்கழகங் கள் கருப்பு பட்டியலில் வைக்கப் பட்டால் எங்களுக்கு ஏன் விசா வழங்க வேண்டும்?” என்றனர்.

இதனிடையே கலிபோர்னியா வில் உள்ள 2 பல்கலைக்கழங்களும் தாங்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை மறுத்துள்ளன. “அமெரிக் காவில் சமீபத்திய பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இங்கு வருவோரிடம் சோதனை மற்றும் விசாரணை அதிகரிக்கப்பட்டுள் ளது. நாங்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்படவில்லை என்று அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகமை எங்களிடம் தெரிவித்துள்ளது” என்று இந்த பல் கலைக்கழகங்கள் கூறியுள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் வெளி யுறவு அமைச்சக செய்தித் தொடர் பாளர் விகாஸ் ஸ்வரூப் நேற்று கூறும்போது, “சம்பந்தப்பட்ட 2 பல்கலைக்கழகங்களும் தாங்கள் அமெரிக்க அரசால் கருப்பு பட்டிய லில் வைக்கப்படவில்லை என்று கூறியுள்ளன. எனவே மாணவர் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக அமெரிக்க அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப் படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x