Last Updated : 09 Dec, 2015 09:34 AM

 

Published : 09 Dec 2015 09:34 AM
Last Updated : 09 Dec 2015 09:34 AM

அம்பேத்கரின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்: பாஜக எம்.பி.க்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

சட்ட மேதை பி.ஆர்.அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு இதுவரை இல்லாத வகையில் அம்பேத்கருக்கு அதிகபட்ச மரி யாதையை வழங்கி வருகிறது. அம்பேத்கரை கவுரவிக்கும் வகை யில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன. குறிப்பாக, இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு சட்ட தினம் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அம்பேத்கரின் நினைவு நாளில், அவரை கவுரவிக்கும் வகை யில் அவரது உருவப்படம் பொறித்த சிறப்பு நாணயங்கள் வெளியிடப் பட்டன. அம்பேத்கரின் 125-வது பிறந்த தினம் இந்த ஆண்டு முழு வதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தலித் மக்களின் பிரதிநிதியாகவும் அரசியல் சட்டத்தை வகுத்தவராகவும் மட்டுமே அம்பேத்கர் இது வரை முன்னிலைப்படுத்தப்பட்டு வந்துள்ளார். ஆனால் அதையும் தாண்டி அவர் பல்வேறு பணி களை செய்துள்ளார். ஆனால் அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. குறிப்பாக, பொருளாதாரம் தொடர் பான அம்பேத்கரின் பார்வையும் எண்ணமும் இன்னமும் முழுமை யாக புரிந்துகொள்ளப்படவில்லை. எனவே, அவரது கொள்கைகள் அனைத்தையும் நாட்டு மக்களிடம் நீங்கள் எடுத்துக் கூற வேண்டும்.

மேலும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் (டிசம்பர் 25) மற்றும் சுவாமி விவேகானந்த ரின் பிறந்த நாட்கள் வருகின்றன. எனவே, அவர்களது கொள்கை களையும் பரப்ப நீங்கள் கூடுதலாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு பேசும்போது, “நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய இருப்பதால் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் அவை நடவடிக்கையில் கலந்துகொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x