பதிவுகள் 2015: பாஜகவின் பின்னடைவுகளும் மோடியின் செல்வாக்கு மீட்பு உத்திகளும்!

பதிவுகள் 2015: பாஜகவின் பின்னடைவுகளும் மோடியின் செல்வாக்கு மீட்பு உத்திகளும்!
Updated on
3 min read

பாஜகவின் உள்ளூர் தலைவர்கள் முதல் மூத்த அமைச்சர்கள் சிலர் வரையில் உதிர்த்த சர்ச்சைப் பேச்சுகள், சகிப்பின்மை விவகாரம், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் என பாஜகவுக்கு பல வகையிலான சங்கடங்கள் நிலவினாலும், 2015-ல் பிரதமர் மோடி தனது செல்வாக்கை நிலைநிறுத்த முனைப்பு காட்டியது கவனிக்கத்தக்கது.

2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது பாஜக. 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து பாஜக தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியைப் பிடித்தது. பிரதமர் ஆனார் மோடி.

பதவியேற்பு விழா, குடியரசு தினத்தில் ஒபாமாவுக்கு அழைப்பு, வெளிநாடுகளில் சுற்றுப்பயணம், மான் கி பாத் என பல்வேறு விஷயங்கள் நடந்தேறின.

2015ஆம் ஆண்டும் ஓர் அரசியல்வாதியாக பிரதமர் மோடிக்கு சிறந்ததாகவே தொடங்கியது. மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஜம்மு - காஷ்மீர் (முக்கிய வெற்றி) என தொடர் வெற்றிமுகம் பாஜகவுக்கு. ஆனால் பிப்ரவரி மாதமே வெற்றி முகம் மாறியது. டெல்லியில் முதல் தோல்வியை சந்தித்தது பாஜக.

தோல்வி பாஜகவுக்கா அல்லது மோடிக்கா?

மத்தியில் ஆட்சி அமைத்த பின்னர் முதல் தோல்வியை தலைநகரத்திலேயே பாஜக சந்திக்க நேர்ந்தது. ஆனால் அந்த தோல்வி அதனைத் தாண்டியும் மோடியின் தனிப்பட்ட தோல்வியாகவும் அர்விந்த் கேஜ்ரிவால் முழு முதல் வெற்றியாகவும் சர்வதேச அளவில் பார்க்கப்பட்டது.

இந்தியாவில் ஆளும் கட்சி ஆட்சி அமைத்த ஒரே வருடத்தில் தலைநகரிலேயே தோல்வியை சந்தித்ததாக சர்வதேச பத்திரிகைகளின் பார்வையும் இருந்தது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 28 இடங்களை வென்று காங்கிரஸ் கட்சி வெளியிலிருந்து அளித்த ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது.

மக்களவைத் தேர்தலில் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் தோல்வியை சந்தித்த அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு டெல்லி தேர்தல் வலுசேர்த்தோடு அல்லாமல் பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட அடியாகவே இது அமைந்தது.

அதோடு அடுத்த 9 மாதங்களில் மீண்டும் ஓர் அடி, பிஹார் தோல்வி. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்தான் பிஹாரில் பாஜகவின் தேர்தல் பிரவேசம் இருந்தது. தனிப்பட்ட, குடும்ப ரீதியான வாய் பேச்சு தாக்குதல்களுக்கும் அந்த பிரச்சாரத்தில் குறைவு இல்லை. பிரதமரின் பிரச்சாரம், பிஹாரில் நடப்பது மாநிலத்துகான தேர்தலா அல்லது மத்திய அரசுக்கானதா என்ற கேள்வியை அவ்வப்போது எழச் செய்தது.

பிரதமரின் கடுமையான பிரச்சாரத்தை தாண்டி பிஹாரில் தோல்வியை சந்தித்து பாஜக. பிஹார் மொத்தம் கொண்ட 243 இடங்களில் ஐக்கிய ஜனதா தளம் 178 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. பாஜகவின் இரண்டாவது மோசமான தோல்வி இது.

டெல்லியில் 70-ல் மூன்று இடங்களிலும் பிஹாரில் 243 இடங்களில் 53 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றது பிரதமர் மோடி ஆட்சிக்கு கிடைத்த ரிப்போர்ட் கார்டாகவே பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த 2 தேர்தலிலும் காங்கிரஸ் பெற்ற வெற்றி குறித்து பேசக்கூட முடியாத அளவுக்கு நிலைமை இருந்ததால் பாஜகவின் தோல்வி சிறிது காலமே பேசப்பட்டது.

ஊழல் புகாரில் சிக்கிய லலித் மோடிக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆதரவான செயல்பாடுகளில் ஈடுபட்டதாக பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் நெருக்கடி ஏற்பட்டது. பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல். வெளியுறவுத்துறை மட்டுமல்லாது மாநிலங்களிலும் பிரச்சினை வெடித்தது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுஹானுக்கும் ராஜஸ்தானில் வசுந்தரா ராஜேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. வியாபம் முறைகேடு விவகாரம் தொடர்பில் 50 பேர் மர்ம மரணம், ஊழல் மற்றும் மரணம் குறித்து சிபிஐ விசாரணை என பிரச்சினை இழுத்தடிக்கப்பட்டது.

மாயமான ராகுல், மீண்டும் மீடியா பார்வையில் காங்கிரஸ்

நாட்டின் பெரிய கட்சி எனும் மதிப்பிழந்து, பிரதான எதிர்க்கட்சி எனும் தகுதியைக்கூட எட்ட முடியாமல் தோல்வியில் இருந்தது காங்கிரஸ்.

2015 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வந்த வேளையில், விடுப்பு எடுத்து கட்சித் தலைமையின் அனுமதியோடு விடுப்பு எடுத்துச் சென்றார் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி தொடங்கியது முதல் அடுத்த 56 நாட்களுக்கு அரசியலிலிருந்து தற்காலிக விடுப்பு எடுத்து ராகுல் காந்தி சென்றார். அவர் எங்கே சென்றார் என்ற சேதியும் இல்லை. சில இடங்களில் ‘ராகுல் காணவில்லை’ என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதன் பின்னர், தாய்லாந்திலிருந்து திரும்பினார் ராகுல்.

நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டம்

பாங்காக் நகரிலிருந்து ராகுல் திரும்பியதும் அப்போது சூடாக விவாதிக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் விவசாயிகள் பேரணி டெல்லி ராம்லீலா மைதானத்தில் ராகுல் காந்தி தலைமையில் நடந்தது. அனைத்தையும் மீறி நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார்.

இதனைக் கொண்டும் அவ்வப்போது நிலவிய சகிப்பின்மை பிரச்சினையைக் கொண்டும் மழை மற்றும் குளிர்கால அமர்வுகளை காங்கிரஸ் கட்சி முடக்கிப் போட்டது.

உத்தரப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி உண்டதாக முஸ்லிம் நபர் மீது கிளப்பப்பட்ட புரளியின் பேரில் நடந்த படுகொலை, அதனைத் தொடர்ந்து மூத்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களது சாகித்ய விருதுகளை திருப்புயளித்தது என பாஜக அரசுக்கு ஏற்பட்ட நெருடல்கள் ஏராளம்.

இந்த அனைத்து பிரச்சினைகளையும் விவகாரங்களையும் தாண்டியும் பிரதமர் மோடி தனது ஆளுமையை இழக்கவில்லை. பாஜகவின் செயல்பாடுகள் கேள்விக்குள்ளானாலும் தனிப்பட்ட முறையில் அவரது புகழ் உயர்ந்தே உள்ளது. அவரது வெளிநாட்டு பயணங்களுக்கும் முற்றிப் புள்ளி இல்லை. அங்கெல்லாம் அவரால் மக்கள் ஈர்க்கப்படுவதும் குறையவில்லை.

பொருட்கள் மற்றும் சேவைகள் வரி மசோதா நிறைவேற்றப்படாத சூழல், குஜராத்தில் ஹர்த்திக் படேல் கிளப்பிய படேல் சமூக விவகாரம் என சறுக்கல்கள் இருந்தாலும் முஸ்லிம் மெஜாரிட்டி கொண்ட ஜம்மு - காஷ்மீரில் பாஜகவின் ஆட்சி, சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது, நேஷ்னல் ஹெரால்ட் வழக்கில் சோனியா மற்றும் ராகுலுக்கும் சுப்பிரமணியன் சுவாமி அளிக்கும் நெருக்கடி; அதனால் காங்கிரஸ் சந்திக்கும் பின்னடைவு என பல விஷயங்கள் பாஜகவுக்கு முன்னேற்றமே.

இதுவரை வெற்றியே கண்டிராத கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம். ] அடையாளமே இல்லாத மணிப்பூர் சட்டப்பேரவையில் கிடைத்த 2 இடங்களும் கூட பாஜக பேசிக்கொள்ளக்கூடிய விஷயமே.

ஆண்டு இறுதியில் கண்ட வான வேடிக்கை - பிரதமரின் தீடீர் பாக். பயணம்

ஆண்டின் முடிவில் டெல்லி சட்டப்பேரவையில் நடந்த சிபிஐ சோதனை, அருண் ஜேட்லி டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய எழுப்பப்படும் நெருக்கடி என பல முக்கிய விஷயங்கள் பேசப்பட்டு வந்ததன் இடையில் அனைத்தையும் புறட்டிப்போட்டார் பிரதமர் தனது திடீர் பயணத்தின் மூலம்.

அதுவும் அவர் சென்றது பாகிஸ்தானுக்கு. ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு, தலைநகர் காபூலில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்ட பிரதமர் மோடி வழியில் பாகிஸ்தான் சென்று அங்கு பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி தேனீர் விருந்தில் கலந்துகொண்டார்.

இந்தியப் பிரதமர் மோடியின் பாகிஸ்தான் பயணம் பாதுகாப்பு ரீதியில் மிகவும் சவாலானது. "மோடியின் பயணம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை மேம்படுத்த உதவும். இதன் மூலம் இப்பிராந்தியம் முழுமைக்கும் நன்மை ஏற்படும்" என சர்வதேச அளவிலான பாராட்டு இதற்கு குவிந்ததை பல காலமாக விரோத போக்கில் இந்தியா - பாகிஸ்தான் உறவு இருக்கும் நிலையில் ஏற்கத் தான் வேண்டும்.

தமிழில்: பத்மப்ரியா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in