Published : 13 Jun 2014 09:01 AM
Last Updated : 13 Jun 2014 09:01 AM

வெளிநாட்டுப் பணத்தில் போராட்டங்களை தூண்டுவது யார்?: பிரதமரிடம் உளவுத் துறை அறிக்கை

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ.க்கள்) வெளிநாட்டுப் பணத்தை வாரியிறைத்து அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தூண்டி வருகின்றன என்று மத்திய உளவுத் துறை பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

மனித உரிமைப் பாதுகாப்பு, சமுதாயத் தொண்டு பணி என்ற பெயரில் என்.ஜி.ஓ.க்கள் பெரு மளவில் நன்கொடைகளை வசூலிக் கின்றன. ஆனால் அந்தப் பணத்தை சமூக நலப் பணிகளுக்கு செல வழிக்காமல் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு சாதுர்யமாக திசைதிருப்பி விடுகின்றன.

குறிப்பாக நிலக்கரிச் சுரங்கம், எண்ணெய்க் கிணறுகள், அணு மின் நிலையங்கள், நீர் மின் நிலை யங்கள், அனல் மின் நிலையங்கள், அணைகள், நதிகள் இணைப்பு உள்ளிட்ட அரசின் முக்கிய திட்டப் பணிகளுக்கு எதிராகப் போராட் டங்களைத் தூண்ட என்.ஜி.ஓ.க்கள் பணத்தை வாரியிறைக்கின்றன.

வெளிநாட்டு நிதியில் சதி

இத்தகைய போராட்டங்களை நடத்தி அரசின் திட்டங்களை முடக்க மேற்கத்திய நாடுகள் என்.ஜி.ஓ.க்கள் மூலமாக இந்தியாவுக்குள் பணத்தை கொண்டு வருகின்றன. நெதர்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் இதில் முக்கிய பங்கு வகிக் கின்றன. குஜராத் உள்பட நாட் டின் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்படும் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களைத் தடுக்க என்.ஜி.ஓ.க்களும் அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வெளிநாட்டு அமைப்புகளும் திட்டமிட்டு செயல் படுகின்றன.

இந்தியாவில் பணியாற்றிய வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தன் னார்வ தொண்டு நிறுவன ஊழியரி டம் அண்மையில் விசாரணை நடத்தப்பட்டது. அவரது லேப் டாப்பை ஆய்வு செய்தபோது இந்தி யாவின் 16 அணு மின் நிலையங்கள், 5 யுரேனிய சுரங்கங்களின் வரை படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தன.

கடந்த சில ஆண்டுகளாக என்.ஜி.ஓ.க்களால் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரண்டு, மூன்று சதவீ தம் வரை சரிந்துள்ளது. இவ் வாறு அந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. இந்த அறிக் கையின் நகல் நிதித் துறை, உள் துறை உள்பட மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் அனுப் பப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் கிரீன் பீஸ் உள்ளிட்ட என்.ஜி.ஓ.க்களின் பெயர் கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நிலக் கரி சுரங்கங்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் கிரீன் பீஸ் அமைப்பு கடந்த 7 ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து ரூ.45 கோடி நிதியைப் பெற்றுள்ளது என்று அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

என்.ஜி.ஓ.க்கள் எதிர்ப்பு

இந்தக் குற்றச்சாட்டை மறுத் துள்ள கிரீன் பீஸ் அமைப்பு, மனித உரிமைகளை நசுக்குவதற்காக உளவுத் துறை இவ்வாறு அறிக்கை தயார் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இதேபோல் பல்வேறு என்.ஜி.ஓ.க்கள் உளவுத் துறையின் அறிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளன. உளவுத்துறை அறிக்கையை அடுத்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள தொண்டு நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x