‘‘பெருமைமிகு தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்ற தொடர்ந்து பாடுபடுவோம்’’ - பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

‘‘பெருமைமிகு தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்ற தொடர்ந்து பாடுபடுவோம்’’ - பிரதமர் மோடி தமிழில் ட்வீட்
Updated on
1 min read

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன், பெருமைமிகு தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்றவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் கைப்பற்றுகிறது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெறுகிறது.

அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தேர்தலில் வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது

‘‘தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மாநில நலனுக்காகவும் பெருமைமிகு தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்றவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக மக்களுக்கு உறுதியளிக்கிறேன். கடினமாக உழைத்த நமது தொண்டர்களைப் பாராட்டுகிறேன்.’’ எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in