Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM

திருப்பதி இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங். வெற்றி: தெலங்கானாவில் டிஆர்எஸ் வெற்றி

திருப்பதி

திருப்பதி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தெலங்கானா மாநிலம், நாகார்ஜுனா சாகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் டிஆர் எஸ் கட்சி வெற்றி பெற்றது.

ஆந்திர மாநிலம் திருப்பதி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் அம்மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளார் டாக்டர் குருமூர்த்தி 6,24,748 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் தெலுங்கு தேசம் வேட்பாளரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பனபாக லட்சுமியை (3,53,642) 2,71,106 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாஜக வேட்பாளரும் கர்நாடக முன்னாள் தலைமைச் செயலாளருமான ரத்னபிரபா 56,992 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தை வகித்தார். காங்கிரஸ் வேட்பாளர் சிந்தா மோகன் 9,559 வாக்குகளும் சிபிஎம் வேட்பாளர் 5,966 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவிற்கு 15,534 வாக்குகள் கிடைத்தது குறிப்பிட தக்கது.

இதேபோல தெலங்கானா மாநிலத்தில் நாகார்ஜுனா சாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் கட்சியின் வேட்பாளர் சோமுல பகத், சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர்89,804 வாக்குகள் பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட குண்டுரு ஜனா ரெட்டி 70,932 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். டிடிபி வேட்பாளர் 1,714 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x