

மேற்கு வங்கத்தில் மம்தா அமைச்சரவையில் இடம்பெற் றிருந்த சுவேந்து அதிகாரி தேர் தலுக்கு முன்னர் பாஜக.வில் இணைந்தார். இவரது தந்தை சிஸிர் அதிகாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சராக பணியாற்றியவர்.
ஆரம்ப காலத்தில் சுவேந்து அதிகாரியின் குடும்பத்தினர் காங்கிரஸில் இருந்தனர். பின்னர் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தனர். முதல்வர் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் ஆதிக்கத்தால், சுவேந்து குடும்பத் தினர் அதிருப்தியில் இருந்தனர். கடந்த டிசம்பரில் சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்தார். அடுத்தடுத்து அவரது குடும்பத்தினர் அனைவரும் பாஜகவில் ஐக்கியமாகினர்.
நந்திகிராம் தொகுதியை உள்ளடக்கிய கிழக்கு மிதினாபூரில் சுவேந்து அதிகாரியின் குடும்பத்துக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது. இதன் காரணமாக பாஜக சார்பில் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டார்.
மேலும், துணிச்சல் இருந்தால் முதல்வர் மம்தா, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று சுவேந்து அதிகாரி பகிரங்கமாக சவால் விடுத்தார். அதை ஏற்று கடந்த தேர்தலில் போவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா, இந்த முறை சுவேந்து அதிகாரிக்கு எதிராக நந்திகிராமில் களம் இறங்கினார்.
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது போயல் வாக்குச்சாவடியில் பெரும் வன்முறை ஏற்பட்டது. முதல்வர் மம்தா வாக்குச்சாவடிக்கு சென்று அதிகாரிகளுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த பின்னணியில் வாக்கு எண்ணிக் கையில் சுவேந்து வெற்றி பெற்றார். இதுகுறித்து சுவேந்து அதிகாரி கூறும்போது, "நந்திகிராம் தொகுதியில் 1,622 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்" என்றார்.
முதல்வர் மம்தா கூறும்போது, "நந்திகிராமில் மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன். எனினும் எனது தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். நந்திகிராம் தேர்தல் முடிவு குறித்து கவலைப்படவில்லை. மேற்கு வங்கத்தில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திரிணமூல் வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவின் ஜனநாயகம் காப் பாற்றப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.