

மேற்குவங்கத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதற்கு சகோதரி மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. மேற்குவங்கத்தில் 8-வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்றது.
மேற்குவங்க தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மேற்குவங்கத்தில் வாக்கு எண்ணிக்கையில் திரிணமூல் காங்கிரஸ், பாஜகவை விடவும் இரண்டு மடங்கு கூடுதல் தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
மேற்குவங்கத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதற்கு சகோதரி மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
‘‘மேற்குவங்கத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதற்கு சகோதரி மம்தா பானர்ஜிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா தொற்று சூழலில் மேற்குவங்க மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கு மாநில அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்’’ எனக் கூறினார்.
மேலும் மற்றொரு பதிவில் ‘‘பாஜகவுக்கு வாக்களித்த மேற்குவங்க மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேற்குவங்கத்தில் பாஜக குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இதற்காக வாக்களித்த சகோதர, சகோதரிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடுமையாக பணியாற்றிய பாஜக தொண்டர்களுக்கும் எனது நன்றி’’ எனக் கூறியுள்ளார்.