அசாம் தேர்தல்: பாஜக 52 இடங்களில் முன்னிலை; காங்கிரஸ் பின்தங்குகிறது

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 52 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

அதேசமயம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 28 இடங்களில்தான் முன்னிலை பெற்றுள்ளது. புதிதாக உருவாகிய அசாம் ஜதியா பரிசத்(ஏஜேபி கட்சி) 3 இடங்களில் முன்னிலையுடன் செல்கிறது.

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. இந்த தேர்ததில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்க தீவிரமாகப் பரிச்சாரம் செய்தது. அதேசமயம், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் கடுமையாக உழைத்துள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிவித்தாலும், சில ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி இருக்கும் எனத் தெரிவித்துள்ளன.

இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தபால் வாக்குகளின் முதல்சுற்றில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 52 இடங்களி்ல் முன்னிலை பெற்றுள்ளது.

புதிதாக உருவாகிய கட்சியான அசாம் ஜதியா பரிசத்(ஏஜேபி கட்சி) 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராகப் போராடி சிறை சென்ற அகில் கோகய் சிப்சாகர் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.

முதல்வர் சர்பானந்தா சோனாவால், சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, ஏஜிபி கட்சித் தலைவர் அதுல் போரா ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்.
அதேசமயம், காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் தேபாப்ரதா சாகியா, ராகிபுல் ஹூசைன் ஆகியோர் பின்தங்கியுள்ளனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in