

கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும்நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்ட மெட்ரோமென் ஸ்ரீதரன் 1200 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.
ேகரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 80 இடங்களி்ல் முன்னிலை வகிக்கிறது.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 58 இடங்களில் முன்னணியில் இருக்கிறது.
நீமம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கும்மணம் ராஜசேகர் 155 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் பாஜகவில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்ட 80 வயதான மெட்ரோமென் ஸ்ரீதரன் பாலக்காடு தொகுதியில் 1400 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நீமம் தொகுதியில் மட்டும் பாஜக வென்றது. அந்த தொகுதியையும் தக்கவைக்கும் நோக்கில், அங்கு போட்டியிட்ட கும்மணம் ராஜசேகர் 266 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். காங்கிரஸ்வேட்பாளர் கே.முரளிதரன், இடதுசாரி வேட்பாளர் சிவன்குட்டி பின்தங்கியுள்ளனர்.
அதேமசமயம், திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி, களக்கூட்டம் தொகுதியில் போட்டியிட்ட ஷோபா சுரேந்திரன், திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணகுமார், மஞ்சேஸ்வரம் தொகுதியில் போட்டியி்ட்ட பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் ஆகியோர் பின்தங்கியுள்ளனர்.
பாஜக சார்பில் கோழிக்கோடு தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் முன்னிலை பெற்றுள்ளார்.