Published : 02 May 2021 06:55 AM
Last Updated : 02 May 2021 06:55 AM

மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா பாஜக? - அசாமில் கடும் போட்டி

திஸ்பூர்

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏற்கெனவே 2 கட்டத் தேர்தல்கள் கடந்த மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி நடந்தமுடிந்துவிட்டன. 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

தேர்தல் நடைபெற்று முடிந்த மாநிலங்களில் அசாம் மாநிலத்தில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ளது. அசாம் மாநிலத்தில் 2001-ம் ஆண்டில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தது. 2016ஆம் ஆண்டு வரை அம்மாநிலத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டில் அசாம் மாநிலத்தை பாஜக கைப்பற்றியது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தருண் கோகாய் கடந்த 2016-ம் ஆண்டு மறைந்ததற்கு பின்னர், செல்வாக்கு மிக்க தலைவர்கள் இல்லாமல் காங்கிரஸ் இந்த சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது.

ஆனாலும் இந்த தேர்தலில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் மெகா கூட்டணியை அமைத்தது. பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜகவின் நீண்ட நாள் கூட்டாளியான போடோலேண்ட் மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொண்டது காங்கிரஸ்.

மேலும் இந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அன்சாலிக் கனமார்ஷா போன்ற கட்சிகளும் காங்கிரஸ் அணியில் இணைந்தன.

சிஏஏ உள்ளிட்ட சட்டங்களால் கடும் எதிர்ப்பு எழுந்தநிலையில் ஆளும் பாஜகவுக்கு தேர்தலில் கடும் சவால் ஏற்பட்டது. எனினும் இந்த தேர்தலில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டியே காணப்பட்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவை பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்துள்ளன.

பாஜக காங்கிரஸ்

டைம்ஸ்நவ் 65 59

பிஎம்ஆர்ஏ 66 60

மை ஆக்ஸிஸ் 80 45

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x