

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே ஏற்பட்டுள்ள கடும் போட்டி நாடுதழுவிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.
அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. மேற்குவங்கத்தில் 8-வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் நான்கு கருத்துக் கணிப்புகளில் திரிணமூல் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளன. ஒரு கருத்துக் கணிப்பு பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.
மேற்குவங்கத் தேர்தல் யாருக்கு வெற்றி வாய்ப்பு?
திரிணமூல் பாஜக சிபிஎம்
டைம்ஸ் நவ்: 158 115 19
ரிபப்ளிக் 133 143 16
பி மார்க் 158 120 14
இடிஜி 169 110 13
போல் ஆப் போல் 155 122 15