Published : 02 May 2021 06:17 AM
Last Updated : 02 May 2021 06:17 AM

5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை: தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில் அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளோடு தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா காணொலி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

கோவிட் விதிமுறைகளை பின்பற்றி சிறப்பான முறையில் வாக்கு எண்ணிக்கையை மேற்கொள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தயாராகி வருகின்றன

வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் 5 மாநில, யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளோடு தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா காணொலி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

தேர்தல் ஆணையம் விதித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று சந்திரா அறிவுறுத்தினார். வாக்கு எண்ணும் மையங்கள் அனைத்திலும் கோவிட் வழிகாட்டுதல்களை முழுவதும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

பெருந்தொற்றின் சவாலான காலகட்டத்திலும் வாக்குப்பதிவை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளை தலைமை தேர்தல் ஆணையர் பாராட்டினார்.

அசாம், கேரளா புதுச்சேரி தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று ( மே 2) நடைபெற உள்ளது.

ஐந்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களிலுளள 822 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை பாதுகாப்பாகவும் எளிதாகவும் நடைபெறுவதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 13 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.

2021 ஏப்ரல் 28 அன்று பெருந்தொற்று நிலையை கருத்தில் கொண்டு, ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்கள்/ விதிமுறைகளுக்கு கூடுதலாக, விரிவான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x