

கடந்த ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு மூலம் வசூலான தொகை ரூ.1,41,384 கோடியாகும். இது ஜிஎஸ்டி அமலானதிலிருந்து ஒரு மாதத்தில் வசூலான அதிகபட்ச தொகையாகும்.
இதில் மத்திய அரசின் சிஜிஎஸ்டிரூ.27,837 கோடி, மாநில அரசுகளின் எஸ்ஜிஎஸ்டி ரூ.35,621 கோடி,ஒருங்கிணைந்த ஐஜிஎஸ்டி ரூ.68,481 கோடி ஆகும். ஐஜிஎஸ்டியில் இறக்குமதி வரி மூலம் வசூலான ரூ.29,599 கோடியும் அடங்கும்.
செஸ் எனப்படும் வரி மூலம் வசூலானது ரூ.9,445 கோடி. இதில் இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.981 கோடி தொகையும் அடங்கும்.
கரோனா வைரஸ் பரவலின் 2-வது அலை மிகத் தீவிரமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இருந்தபோதிலும் தொழில் நிறுவனங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரியை செலுத்தியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.