Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான சாலைகள் அமைக்க இலக்கு: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று கூறியதாவது:

மத்திய அரசு 2019-2025 ஆண்டுகளில் தேசிய உட்கட்டமைப்பு திட்டப்பணிகளை வகுத்துள்ளது. இந்தியாவில் உலகத்தரமான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதே இதன்நோக்கம். அதன்படி ரூ.111 லட்சம்கோடி மதிப்பி லான 7,300 உட்கட்டமைப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகம், விமான நிலையம், விவசாயம் மற்றும் கிராமப்புறம் ஆகிய அனைத்து துறைகளையும் உள்ளடக்கும் வகையில் உட்கட்டமைப்பு திட்டங்கள் உள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் நடப்பு நிதி ஆண்டில் ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டர் வீதம் சாலைக் கட்டுமானப் பணிகள் திட்டமிடப் பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான சாலைக் கட்டுமானப் பணிகளை முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்திய - அமெரிக்க மாநாட்டில், அமெரிக்க நிறுவனங்களை இந்திய உட்கட்டமைப்பு துறைகளில் முதலீடு செய்யவும் கட்கரி அழைப்பு விடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x