ரோமானியா நாட்டில் இருந்து ஆக்சிஜன் கருவிகள் வந்தன

ரோமானியா நாட்டில் இருந்து ஆக்சிஜன் கருவிகள் வந்தன
Updated on
1 min read

ஆக்சிஜன் கான்சென்ட் ரேட்டர்கள் 80, ஆக்சிஜன் சிலிண்டர்கள் 75 மற்றும் 20 ஆக்சிஜன் தெரபிகருவிகள் ரோமானியா நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை காலை அனுப்பப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியன் சிவில் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரோமானியா அரசு இந்த மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது. ரோமானியாவுக்கு இந்தியாவின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக ரோமானியா, மால்டோவா மற்றும் அல்பேனியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதர் ராகுல் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

இந்தியாவுக்கான ரோமானியா வின் தூதர் டேனியலா செசனோவ் டானே கூறுகையில், இந்தியா எதிர்கொள்ளும் மோசமான கரோனா பாதிப்பு சூழலுக்கு உதவும் வகையில் ஐரோப்பிய யூனியன் உட்பட சர்வதேச நாடுகளோடு ரோமானியாவும் கைகோர்த்துள்ளது. இத்தகைய மோசமான பேரழிவு காலத்தை எதிர்கொண்டு சமாளிக்க இந்தியாவுடன் கைகோர்த்து நிற்பதும், இந்தியாவுடனான பரஸ்பர உறவை வலுப்படுத்துவ தும் எங்களுடைய கடமை. பேரழிவு நெருக்கடியிலிருந்து மீள இந்திய மக்களுக்காக ரோமானியா பிரார்த்தனை செய்யும் என்று கூறினார்.

ரோமானியா பாதுகாப்புத் துறையின் விமானத்தில் இவை இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டன. ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் முதல் உதவி ரோமானியா நாட்டினுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in