

டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “நோய் அறிகுறிகள் தோன்றியதிலிருந்து நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவாலுக்கு கடந்த வாரம் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கேஜ்ரிவால் சிறிது காலம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. கரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் விகிதம் 30 சதவீதமாக உள்ளது.