கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் கவலைக்கிடம்

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் கவலைக்கிடம்
Updated on
1 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் நேற்று திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரி வித்தனர்.

92 வயதான பரதன், டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுயநினைவு இழந்தார். அவர் உடனடியாக மத்திய டெல்லியில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூத்த மருத்துவர்கள் கண் காணிப்பின் கீழ் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரி கூறினார்.

பரதனின் மனைவி, நாக்பூர் பல்கலைக்கழத்தில் பேராசிரியராக பணியாற்றிவர். இவர் கடந்த 1986-ம் ஆண்டு காலமானார். இத்தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிற்சங்க இயக்கம் மற்றும் இடதுசாரி அரசியலில் முன்னணி யில் திகழ்ந்த பரதன், 1957-ம் ஆண்டு அம்மாநில சட்டப்பேரவைக்கு சுயேச்சை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும் பின்னர் ஏஐடியூசி தலைவராகவும் உயர்ந்தார்.

1990-களில் டெல்லி அரசியலுக்கு திரும்பிய பரதன், கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆக தேர்வு செய்யப்பட்டார். 1996-ல் இந்திரஜித் குப்தாவுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in