50-வது பிறந்தநாள் கொண்டாடினார் சல்மான்: திரைப்பிரபலங்கள் திரண்டு வந்து வாழ்த்து

50-வது பிறந்தநாள் கொண்டாடினார் சல்மான்: திரைப்பிரபலங்கள் திரண்டு வந்து வாழ்த்து
Updated on
1 min read

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நேற்று தன் 50வது பிறந்தநாளை கொண்டாடினார். இவ்விழாவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பங்கேற்றனர்.

மும்பை அருகே பான்வெல் என்ற இடத்தில் உள்ள பண்ணை வீட்டில் நடந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் சல்மான் கானின் தாய் சல்மா, தந்தை சலீம் கான், மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் நடிகைகள் தபு, ஜெனிலியா, அமீஷா படேல், ஊர்வசி, மல்லிகா ஷெராவத், இயக்குனர் பரா கான், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உட்பட பலர் பங் கேற்றனர்.

மேலும் ஷாருக் கான், இயக்குனர் கரண் ஜோஹர் மற்றும் ரசிகர்கள் உட்பட பலர் ‘ட்விட்டர்’ மூலம் அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இதனிடையே ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் ‘கான் மார்க்கெட்’ என்ற புதிய இணையதளத்தை சல்மான் கான் நேற்று தொடங்கினார். இது குறித்து தன் ‘ட்விட்டர்’ பக்கத்தில், ‘‘எனது ரசிகர்களுக்கு அன்பளிப்பு அளிக்கும் வகையில் இந்த இணையதளத்தை தொடங்கியுள்ளேன். உங்கள் பெயர்களை பதிவு செய்யுங்கள். சிறப்பு விருந்து காத்திருக்கிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.

அவர் கொடுத்துள்ள அந்த இணையதள முகவரிக்கு சென்றால் ‘ஹலோ, நமஸ்தே, வணக்கம், சத் ஸ்ரீ அகால், சலாம் அலைக்கும்’ என பன்மொழிகளில் முகப்பு பக்கம் வடிவமைக்கப்பட்டு ரசிகர்களை வரவேற்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in