

கேரள மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பில் இடதுசாரி அணி மீண்டும் ஆட்சியைக் கைபற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்தான் கடுமையான போட்டி இருந்து வருகிறது. பாஜக தனித்து போட்டியிடுகிறது.
2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணி களம் கண்டன. ஆனால் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் உள்ள வலிமை மிக்க ஈழவ சமூகம் சார்ந்த அரசியல் அமைப்பான பாரத் தர்ம ஜனசேனாவுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்டது. 15.8 சதவீத வாக்குகளுடன், ஓரிடத்தில் பாஜக வென்றது.
கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே மட்டுமே இதுவரை நேரடி போட்டி நிலவும் நிலையில் இந்த முறை தனது வாக்கு வங்கியை காண்பிக்கும் நோக்குடன் பாஜகவும் களமிறங்கியுள்ளது.
இந்தநிலையில் கேரள மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பின்படி
இடதுசாரி அணி 76 இடங்கள்
காங்கிரஸ் அணி 61 இடங்கள்
பாஜக அணி 3 இடங்கள்
மொத்தம் 140 இடங்கள்