மிதமான கோவிட்-19 பாதிப்பு; ஆயுஷ் -64 சிறந்த மருந்து: ஆயுஷ் அமைச்சகம் தகவல்

மிதமான கோவிட்-19 பாதிப்பு; ஆயுஷ் -64 சிறந்த மருந்து: ஆயுஷ் அமைச்சகம் தகவல்
Updated on
1 min read

லேசான மற்றும் மிதமான கோவிட்-19 தொற்று நோயாளிகளுக்கான சிறந்த நிவாரணி ஆயுஷ் 64 என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில், லேசான மற்றும் மிதமான கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆயுஷ்-64, ஓர் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஆயுஷ் அமைச்சகத்தின் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்தியக் குழு, பல்வேறு மூலிகைகளிலிருந்து தயாரித்த ஆயுஷ்-64 என்ற மருந்து, அறிகுறிகள் அல்லாத, லேசான மற்றும் மிதமான கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சையில் நல்ல பலன் அளிப்பதாக நாட்டின் பிரபல ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லேசானது முதல் மிதமானது வரையிலான தொற்று உள்ள நோயாளிகளுக்கு ஆயுஷ் 64 மருந்தை வழங்கி அதன் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்ய, பலதரப்பட்ட மருத்துவ சோதனைகளை, ஆயுஷ் அமைச்சகம்- அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மன்றம்‌ (சிஎஸ்ஐஆர்) ஆகியவை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்தன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கோவிட்- 19 மேலாண்மைக்கான தேசிய பணிக் குழு, ஆயுர்வேதம் மற்றும் யோகாவின் அடிப்படையில் தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறைகளுள் இந்த மருந்தை பரிந்துரைத்துள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in