இந்தியாவில் இதுவரை 14.5 கோடி பேருக்கு கரோனா வைரஸ் தடுப்பூசி

இந்தியாவில் இதுவரை 14.5 கோடி பேருக்கு கரோனா வைரஸ் தடுப்பூசி
Updated on
1 min read

இந்தியாவில் இதுவரை 14.5 கோடி பேருக்கு கரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாட்டில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கரோனா வைரஸ் தடுப்பூசி போட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வரை 14,50,85,911 பேருக்கு கரோனா வைரஸ் தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை ஊழியர்களில் 93,23,439 பேர் முதல் டோஸையும், 60,59,065 பேர் 2-வது டோஸையும் போட்டுக் கொண்டுள்ளனர். முன்களப் பணியாளர்களில் 1,21,00,254 பேர் முதல் டோஸையும், 64,11,024 பேர் 2-வது டோஸையும் போட்டுக் கொண்டுள்ளனர். 45 முதல் 59 வயதுக்குள்பட்டோர் பிரிவில் 4,92,77,949 பேர் முதல் டோஸையும், 26,78,151 பேர் 2-வது டோஸையும் செலுத்திக் கொண்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் 5,05,37,922 பேர் முதல் டோஸையும், 86,98,107 பேர் 2-வது டோஸையும் செலுத்திக் கொண்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in