சகிப்பின்மை அதிகரித்திருப்பதாக பேசியதால் ஷாருக்கானின் தில்வாலே திரைப்படம் மங்களூருவில் நிறுத்தம்

சகிப்பின்மை அதிகரித்திருப்பதாக பேசியதால் ஷாருக்கானின் தில்வாலே திரைப்படம் மங்களூருவில் நிறுத்தம்
Updated on
2 min read

இந்துத்துவா அமைப்பினர் மிரட்டல் எதிரொலி

*

இந்தி நடிகர் ஷாருக் கான் சில தினங்களுக்கு முன்பு, நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து விட்டதாக கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி உள்ளிட்ட இந்துத்துவா அமைப் பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஷாருக் கான், தனது கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப் பட்டதாக சில தினங்களுக்கு முன்பு விளக்கம் அளித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஷாருக் கானின் 'தில்வாலே' திரைப்படம் வெளியானது. இதற்கு இந்துத் துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரி வித்தனர். கர்நாடக மாநிலம் மங்களூ ருவில் 'தில்வாலே' திரைப்படம் திரையிடுவதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம்,சிவசேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பி னர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தில்வாலே திரைப்படத்தை திரையிட்ட திரை யரங்கங்களை விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம்,சிவசேனா உள்ளிட்ட அமைப்பினர் நேற்று முன் தினம் இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் சிட்டி சென்ட்ரல், ஃபோரம் ஃபிஸா மால், பாரத் மால் உள்ளிட்ட இடங்களில் திரையரங்க நிர்வாகிகளை தாக்க வும் முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட் டது. இதனால் தில்வாலே திரைப் படத்தின் காட்சிகள் நிறுத்தப்பட்ட தால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இது குறித்து தக்ஷின கன்னட மாவட்ட‌ விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் த‌லைவர் ஜகதீஸ் சேனவா கூறும்போது, “இந்திய மக்கள் டிவி தொகுப்பாளராக இருந்த ஷாருக் கானை மிகப் பெரிய திரை நட்சத்திரமாக உரு வாக்கியுள்ளனர். நாட்டில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளனர். ஆனால் அவரோ நாடு முழுவதும் சகிப் பின்மை அதிகரித்து விட்டதாக கூறியுள்ளார். எனவே ஷாருக் கானுக்கு சகிப்பின்மை என்பதன் உண்மையான அர்த்தத்தை நாங்கள் புரிய வைக்க விரும்புகிறோம். அவரது திரைப்படத்தை எக்காரணம் கொண்டும் இங்கு திரையிட விட மாட்டோம். ஷாருக் கான் முஸ்லிம் என்பதால் இந்துத்துவா அமைப்பி னர் எதிர்ப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. சகிப்பின்மை குறித்து அவர் தெரிவித்த கருத்தை கண்டித்தே இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

இதனிடையே பஜ்ரங் தளம் அமைப்பினர், ஷாருக் கான் திரைப்படத்தை திரையிட்ட திரையரங்க உரிமையாள‌ரை மிரட்டியதாக சூரத்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது. இதையடுத்து திரையரங்கங் களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங் கப்பட்டுள்ளது. மேலும் ஷாருக் கானின் திரைப்படத்தை திரையிட அனுமதிக்குமாறு போலீஸார் இந்த்துவா அமைப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், சிவசேனா உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள், நாட்டுக்கு எதிராக பேசிய ஷாருக் கான், அமீர் கான் ஆகியோரின் திரைப்படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம். எங்களை மீறி திரையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்ததாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in