டெல்லியில் நீதிபதிகள், அதிகாரிகளுக்காக கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட 5 நட்சத்திர ஹோட்டல்

டெல்லியில் நீதிபதிகள், அதிகாரிகளுக்காக கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட 5 நட்சத்திர ஹோட்டல்
Updated on
1 min read

டெல்லியில் நீதிபதிகள், நீதிமன்ற உயர் அதிகாரிகளுக்காக 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்று கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இதற்காக டெல்லியில் உள்ள அசோகா நட்சத்திர ஹோட்டலுடன் ப்ரைமஸ் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி சாணக்யாபுரி நீதிபதி கீதா குரோவர் கூறியதாவது:

அதன்படி கரோனாவால் பாதிக்கப்படும் நீதிபதிகள், நீதிமன்ற உயரதிகாரிகளுக்காகவே அசோகா நட்சத்திர ஹோட்டல் அறைகள் பயன்படுத்தப்படும்.

ஹோட்டல் அறைகளில் சேரும் மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணியை மருத்துவமனை ஏற்றுக்கொள்ளும்.

ஹோட்டல் ஊழியர்களுக்கு கவச உடை வழங்கப்படும். கரோனா நோயாளிகளை அணுகுவது தொடர்பாக அடிப்படை பயிற்சி வழங்கப்படும்.
ஒருவேளை ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் அதனை மருத்துவமனையே ஈடு செய்யும். இதற்கான மொத்த செலவையும் அங்கு தங்கும் நோயாளிகளிடம் பெற்று மருத்துவமனை நிர்வாகம் ஹோட்டல் நிர்வாகத்துக்கு வழங்கும்.

டெல்லியில் நேற்று ஒரே நாளில் 20,000 பேருக்கு தொற்று உறுதியானது. 380 பேர் பலியாகினர். இந்நிலையில், டெல்லியில் நீதிபதிகள், அதிகாரிகளுக்காக 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்று கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in