

2015-ம் ஆண்டில் சர்வதேச அளவில் நிதிச் சுழல் ஏற்பட்டபோதும் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை. இந்தியப் பொருளாதார நிலை திருப்தியளிக்கிறது என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்த ஆண்டு முடியும் தருவாயில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியை திரும்பிப் பார்க்கும் போது நான் திருப்தியடைகிறேன்.
2015-ம் ஆண்டில் சர்வதேச அளவில் நிதிச் சுழல் ஏற்பட்டபோதும் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை. 7%-ல் இருந்து 7.5% வரை வளர்ச்சியை எட்ட வாய்ப்பிருக்கிறது.
சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை இந்த ஆண்டு கொண்டு வந்திவிடலாம் என்று நம்பிகையுடன் இருந்தேன். ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேவையில்லாத இடையூறால் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.
காங்கிரஸ் போன்ற தேசிய கட்சி இதுபோன்ற தடைகளை ஏற்படுத்துவதால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியையும் பாதிக்கிறது. முடக்கம் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு தவறான முன்னுதாரணமாகும்.
இருப்பினும், 2016-ல் சரக்கு மற்றும் சரக்கு வரி மசோதாவை நிறைவேற்றுவது, உலக நாடுகளுக்கு இணையாக நேரடி வரி விதிப்பில் மாற்றங்களை கொண்டு வருவது, இந்தியாவில் தொழில்கள் தொடங்க எளிய நடைமுறைகள் உருவாக்குவது போன்ற திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்" என்றார்.