Published : 26 Apr 2021 03:17 AM
Last Updated : 26 Apr 2021 03:17 AM

கரோனா வைரஸ் தடுப்பு விதிகள் பற்றி வதந்தி பரப்பும் பதிவுகளை நீக்க சமூக வலைதளத்துக்கு உத்தரவு

ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இந்தியாவில் செயல்பட மத்திய அரசு சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தது. இதன்படி, அவதூறு வன்முறையைத் தூண்டுவது, மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத் தும் பதிவுகளை நீக்க சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட முடியும்.

அதன்படி, கரோனா தொற்று விதிமுறைகள் பற்றிய வதந்திகள், சமூக பதற்றத்தை ஏற்படுத்துதல், பழைய மற்றும் தேவையற்ற புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற 100-க்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்க ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.

இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘‘கரோனா தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடேபோராடி வரும் நிலையில் சிலர்,சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தி மக்களிடம் பீதியை ஏற்படுத்துகின்றனர். அதுபோன்ற பதிவுகளை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள் மூலம் அரசை ஆரோக்கியமான முறையில் விமர்சிக்கலாம், கரோனா தொற்றை கையாள்வது எப்படிஎன்று ஆலோசனைகள் கூறலாம்,உதவிகள் கேட்கலாம்.

அதை விட்டு இந்த சிக்கலான நேரத்தில் முறையற்ற வகையில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பது அவசியம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x