ரயில்வே ஊழியர்கள் 93 ஆயிரம் பேருக்கு கரோனா

ரயில்வே ஊழியர்கள் 93 ஆயிரம் பேருக்கு கரோனா
Updated on
1 min read

கரோனா வைரஸால் 93 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ரயில்வே ஊழியர்கள் 93 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட் டிருப்பதாக ரயில்வே வாரியத் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான சுனீத் சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித் தார். அவர் மேலும் கூறியதாவது: பொது முடக்கக் காலத்திலும் ரயில்வே ஊழியர்கள் திறம்பட பணியாற்றி வந்தனர். இந்நிலையில் 93 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ரயில்வே நடத்தி வரும் 72 மருத்துவமனைகளில் 5 ஆயிரம் படுக்கை வசதிகள் ஊழியர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான சிகிச்சையை ரயில்வே வழங்கும். கரோனாவால் பாதிக்கப்பட்டோர் அருகில் உள்ள ரயில்வே மருத்துவ மனைகளை அணுகலாம்.

பாதிக்கப்பட்ட அனைவருமே மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள ரயில்வே டாக்டர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

ரயில்வேயில் முன்களப் பணியாளர்களாக இருக்கும் பராமரிப்பாளர்கள், டிரைவர்கள், பரிசோதகர்கள், ரயில்வே நிலைய ஊழியர்களுக்கு அடிக்கடி மருத்துவப் பரிசோதனையை நடத்தி வருகிறோம். இவ்வாறு சுனீத் சர்மா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in