Last Updated : 18 Dec, 2015 10:51 AM

 

Published : 18 Dec 2015 10:51 AM
Last Updated : 18 Dec 2015 10:51 AM

அருணாசலில் காங். அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: அதிருப்தி எம்எல்ஏக்களால் ‘புதிய முதல்வர்’ தேர்வு

அருணாசலப் பிரதேசத்தில் நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. சமீபத் தில் பேரவைத் துணைத் தலைவர் நார்பு தாங்டாங் உட்பட 14 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அதிருப்தி எம்எல்ஏக் களாக மாறினர்.

முதல்வர் நபம் துகியின் பரிந் துரையின்பேரில் அவர்களை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் நபம் ரெபியா உத்தரவிட்டார்.

இந்நிலையில், மாநில அரசு அறிவித்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் தேதியை மாற்றி ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா உத்தரவிட்டார். பேரவை சிறப்புக் கூட்டத்தொடர் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு முதல்வரும், பேரவைத் தலைவரும் கடும் எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர். அதிருப்தி எம்எல்ஏக் கள் பேரவையை முற்றுகையிட முயன்றதால், பேரவைத் தலைவ ரின் உத்தரவுப் படி பேரவை வளா கம் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

அருணாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க மத்திய அரசு சதி செய்வதாகக் கூறி காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் கடந்த இரு நாட்களாக அமளியில் ஈடுபட்டு வருகிறது. ஆளுநரை பதவிநீக்கம் செய்ய காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர் பாக குடியரசுத் தலைவரிடமும் முறையிட்டுள்ளது.

தற்காலிக சட்டப்பேரவை

பேரவை வளாகம் மூடப்பட்டு, பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால், சமுதாயக் கூடத்தில் சட்டப் பேரவையை அதிருப்தி எம்எல்ஏக்கள் நடத்தினர். நேற்று முன்தினம் நடந்த இந்த சட்டப் பேரவைக் கூட்டத்துக்கு பேரவை துணைத் தலைவர் நார்பு தாங்டாங் தலைமை வகித்தார்.

காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக் கள் 21 பேர், பாஜக எம்எல்ஏக்கள் 11 பேர், 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். முதல்வரும், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 26 பேரும் புறக்கணித்தனர்.

பாஜ எதிர்க்கட்சித் தலைவர் தமியோ தாகா பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். கண்டனத் தீர்மானத்துக்கு 33 எம்எல்ஏக்களும் ஆதரவாக வாக்களித்ததால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்று விடுதி ஒன்றின் கருத்தரங்க கூடத்தில், ஆளுநரின் ஒப்புதலோடு சட்டப் பேரவை மீண்டும் கூடியது.

பேரவை துணைத் தலைவர் நார்பு தாங்டாக் தலைமை வகித்தார். அப்போது, முதல்வர் நபம் துகி மீது பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. குரல் வாக்கெடுப் பில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக் கள் 20 பேர், பாஜக எம்எல்ஏக்கள் 11 பேர், 2 சுயேச்சைகள் ஆதரித்து வாக்களித்தனர். மொத்தமுள்ள 60 உறுப்பினர்களில் 33 பேர் தீர் மானத்தை ஆதரித்தனர். இதனால் தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

புதிய முதல்வராக அதிருப்தி எம்எல்ஏக்களுள் ஒருவரான கலிகோ புல் தேர்வு செய்யப்பட்டார். அவைத் தலைவராக புல் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவித் துள்ள பேரவைத் துணைத் தலைவர், அவரைப் புதிய முதல் வராக ஏற்கும்படியும், பதவிப் பிர மாணம் செய்துவைக்கும்படியும் ஆளுநருக்கு முறைப்படி கோரிக்கை விடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த அவை நடவடிக்கைகளை முதல்வர் நபம் துகியும், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 26 பேரும் புறக்கணித்துள்ளனர். மேலும் இந் நடவடிக்கைகளை சட்டவிரோதம், ஜனநாயக விரோதம் என குறிப் பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x