Published : 23 Apr 2021 03:14 AM
Last Updated : 23 Apr 2021 03:14 AM

மேற்கு வங்கத்தில் 6-ம் கட்ட தேர்தல்: 79 சதவீத வாக்குகள் பதிவு

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவைக்கு 8 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் 5 கட்ட வாக்குப் பதிவு ஏற்கெனவே முடிந்துள்ளது. 6-ம் கட்ட வாக்குப் பதிவு, கரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் நேற்று நடைபெற்றது.

வடக்கு தினாஜ்பூர், புர்பா பர்தமான், நாடியா, வடக்கு 24 பர்கானாஸ் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகள் தேர்தலை எதிர்கொண்டன. 27 பெண்கள் உட்பட 306 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை விறுவிறுப்புடன் நடைபெற்றது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே சிறிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்நிலையில் 6-ம் கட்ட தேர்தலில் 79.09 சதவீத வாக்குகள் பதிவாகின.

மேற்கு வங்கத்தில் 7-ம் கட்ட தேர்தல் வரும் 26-ம் தேதியும் இறுதிக் கட்ட தேர்தல் 29-ம் தேதியும் நடைபெற உள்ளது. வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. இத்துடன் தமிழகம், புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாமிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x