இதுவரை செலுத்தப்பட்ட 12.76 கோடி டோஸ் கரோனா தடுப்பூசியில் 90 சதவீதம் கோவிஷீல்டு

இதுவரை செலுத்தப்பட்ட 12.76 கோடி டோஸ் கரோனா தடுப்பூசியில் 90 சதவீதம் கோவிஷீல்டு
Updated on
1 min read

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட 12.76 கோடி டோஸ் கரோனா தடுப்பூசியில் 90 சதவீதம் கோவிஷீல்டு ஆகும்.

கரோனா தொற்று பரவு வதைத் தடுக்க 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. நாட்டில் இதுவரை 12.76 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதம் கோவிஷீல்டு தடுப்பூசி ஆகும்.

மற்றவை கோவாக்சின் தடுப்பூசி ஆகும். இதன்படி, 11,60,65,107 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், 1,15,40,763 டோஸ் கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 15-க்கும்மேற்பட்ட மாநிலங்கள் மற்றும்சண்டிகர், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் மக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்பட்டுள்ளது. இத்தகவல் மத்திய அரசின் கோ-வின் (CO-WIN) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு மருந்துக்கான பொருட்கள் அதிகமாக கிடைப்பதால் கோவாக்சினைவிட அதிகமாக தயாரிக்கப்படுகிறது என்றும் வரும் காலத்தில் கோவாக்சின் தடுப்பூசியும் அதிக அளவில் தயாரிக்கப்படும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in