Published : 22 Apr 2021 03:13 AM
Last Updated : 22 Apr 2021 03:13 AM

மகனுக்காக மினி ஜீப் தயாரித்த தந்தை

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அரிக்கோடை சேர்ந்தவர் ஷாகிர். இவர் கத்தாரில் பணிபுரிந்தவர். இவர் தன் மகனுக்காக ஓல்டு ஸ்கூல் ஜீப்பின் மினியேச்சர் மாடலை வீட்டிலேயே உருவாக்கியுள்ளார்.

வண்டியின் சேஸிஸை வடிவமைத்தவர், ஷீட் மெட்டல் வேலைப்பாடுகளை உள்ளூர் பட்டறையில் தயாரித்துள்ளார். பிற உதிரி பாகங்களை வெவ்வேறு வாகனங்களிலிருந்து பெற்றுள்ளார். ஹெட்லைட், பவர் ஸ்டியரிங், மேனுவல் கியர்பாக்ஸ் என அனைத்தையும் வடிவமைத்துள்ளார். ஆரம்பத்தில் 1000 வாட் எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் ஜீப்பை இயக்கும் வகையில் உருவாக்கினார். ஒருமுறை இந்த பேட்டரியை சார்ஜ் செய்தால் 60 கி.மீ. வரை பயணிக்க முடிந்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து பஜாஜ் டிஸ்கவர் இருசக்கர வாகனத்தின் இன்ஜினை அதில் பொருத்தி இயக்கும் வகையில் மாற்றியுள்ளார். லிட்டருக்கு 35 கி.மீ. வரை மைலேஜ் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இந்த மினி ஜீப்பில் 9 கியர்களை வைத்திருக்கிறார். வழக்கமாக வைக்கப்படும் இடத்தில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸும், டேஷ்போர்டுக்குக் கீழ் 4 கியர்களைக் கொண்ட தனி லிவரையும் பொருத்தியுள்ளார். ரிவர்ஸ் கியரும் இந்த ஜீப்பில் உள்ளது. இதில் 2-3 சிறுவர்கள் பயணிக்கலாம். இதை உருவாக்க ரூ.1.75 லட்சம் செலவு ஆனதாக கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x