

பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
நாடு முழுவதும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இது தொடர்பாகமாநில அரசுகளுக்கு தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ராணுவ தளபதி எம்.எம்.நரவானேவை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக, தேவைப்பட்டால் ராணுவ மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, மாநிலங்களில் உள்ள மூத்த ராணுவ அதிகாரி, சம்பந்தப்பட்ட மாநில முதல்வரை தொடர்புகொண்டு ஆலோசனை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபோல, கரோனா விவகாரத்தில் தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்குமாறு விமானப்படை மற்றும் கடற்படைதளபதிகளையும் பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, மக்களுக்கு எந்தெந்த ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியும் என்பதுகுறித்து பாதுகாப்புத் துறை செயலாளர் அஜய் குமார் ஆய்வு செய்தார். இதன் அடிப்படையில் நாடுமுழுவதும் கன்டோன்மென்ட் வாரியத்தால் நடத்தப்படும் 67 மருத்துவமனைகளில் மக்களுக்கும் மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.