

கிழக்கு லடாக் பகுதியில் சீன படைகள் ஊடுருவிய பின்னர் இந்தியா - சீனா இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டது. அதன்பின் இருதரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இருநாட்டு எல்லையிலும் அமைதியை நிலைநாட்ட விரைவில் தீர்வு காண ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதுகுறித்து ட்விட்டரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் நேற்று வெளி யிட்ட பதிவில், ‘இந்திய எல்லைப் பகுதிகளில் சீன படைகள் தொடர்ந்து குவிக்கப்பட்டிருப்பது தவுலத்பெக்ஓல்டி ராணுவ விமான தளம் உட்பட நமது போர் தந்திர நலன்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக அமைந் துள்ளது. மத்திய அரசின் பயனற்ற பேச்சுவார்த்தைகளால் நமது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட் டுள்ளது’’ என்று தெரிவித் துள்ளார்.