

தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. யாருக்கு வாக்களித் தோம் என்பதை தெரிவிக்கும் விவிபாட் இயந்திரமும் தற்போது பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் 5 மாநில தேர்தலில் வாக்கு எண்ணிக்கை யின் போது, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டு களை 100 சதவீதம் முழுமையாக சரிபார்க்க உத்தரவிடுமாறு கோபால் சேத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீிதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தை அணுகினீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ‘‘தேர்தல் ஆணையத் திலும் இதுதொடர்பாக மனு கொடுத்துள்ளோம்’’ என்று கோபால் சேத் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் “தற்போது 5 மாநில தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் பணிகள் பாதியில் இருக்கும்போது இதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை. எனவே மனுவைத் தள்ளுபடி செய்கிறோம்" என்று தெரிவித்தனர்.