

சத்தீஸ்கர் மாநிலத்தில் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள தண்டேவாடா மாவட்டத்தில் 4 நக்ஸலைட்டுகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
தண்டேவாடா மாவட்டம், பான்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நக்ஸலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீஸார், இவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள், சாய் என்கிற சாகி (30), கமாதெலமி (27), லட்சுமணன் (30) மற்றும் ராஜேஷ் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் நக்ஸலைட் அமைப்பில் கீழ் நிலையில் பணியாற்றியவர்கள் ஆவர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பள்ளிக்கட்டிடம் ஒன்றை தகர்த்தது, அக்டோபர் 25-ம் தேதி ரயில் இன்ஜினுக்கு தீ வைத்தது உள் ளிட்ட பல்வேறு குற்றச் செயல் களில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸார் தெரிவித் தனர். கைது செய்யப்பட்ட நால்வரி டமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.