Published : 19 Apr 2021 07:09 PM
Last Updated : 19 Apr 2021 07:09 PM

கரோனா; புதிய ஆக்சிஜன் விநியோக முறை: டிஆர்டிஓ சாதனை

மிகவும் உயரமான பனிப்பிரதேச இடங்களில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்காக எஸ்பிஓ2 (ரத்த பிராணவாயு செறிவூட்டல்) வை சார்ந்து தானியங்கி துணை ஆக்சிஜன் விநியோக முறையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது.

பெங்களூருவில் அமைந்துள்ள டிஆர்டிஓ-வின் ராணுவ உயிரி பொறியியல் & மின் வேதியியல் மருத்துவ ஆய்வகம் உருவாக்கியுள்ள இந்த தானியங்கி ஆக்ஸிஜன் விநியோக அமைப்பு முறை, ரத்த பிராணவாயு செறிவூட்டல் அளவுகளின் அடிப்படையில் ஆக்சிஜனை வழங்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மனிதர்களை காக்கும்.

தற்போதைய கோவிட்-19 காலக்கட்டத்தில் இந்த தானியங்கி ஆக்ஸிஜன் விநியோக அமைப்புமுறை ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

கள சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயலாற்றும் வகையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த விநியோக அமைப்பு, செயல்திறன் மிக்கதாகவும் விலை குறைவானதாகவும் இருக்கும். இதன் மொத்த உற்பத்தி ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதை யார் வேண்டுமானாலும் எளிதாக இயக்க முடியும் என்பதால், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணிச்சுமை குறையும்.

பல்வேறு அளவுகளில் கிடைக்கும் இந்த விநியோக அமைப்பு, தற்போதைய கடினமான காலகட்டத்தில் பேருதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் அதிக அளவிலான கரோனா நோயாளிகளை கையாள்வதில், பல்வேறு வகைகளில் இது உதவும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x