

நேஷனல் ஹெரால்டு வழக்கு விவகாரம் தொடர்பாக நாடாளு மன்றத்தின் இருஅவைகளிலும் இரண்டாவது நாளாக நேற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
மாநிலங்களவை நேற்று காலையில் கூடியதும், அவையின் மையப்பகுதிக்குச் சென்ற காங்கிரஸ் எம்.பி.க்கள், ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதாகக் கூறி கோஷம் எழுப்பினர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்களும் குரல் கொடுத்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசும்போது, “அமலாக்கத் துறை இயக்குநர் நேஷனல் ஹெரால்டு வழக்கை முடித்துக்கொள்ள முடிவு செய் திருந்த நிலையில், அந்த அமைப் புக்கு புதிதாக நியமிக்கப்பட்ட இயக்குநர் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கத் தொடங்கி இருக்கிறார். இது ஜனநாயகப் படுகொலை” என்று குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை அடுத்தடுத்து பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. எனினும், நிலைமையில் முன்னேற் றம் இல்லாததால் எவ்வித அலு வலும் நடைபெறாமல் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
மக்களவையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர் கள் அமளியில் ஈடுபட்டபோதிலும் சிறிதளவு அவை நடவடிக்கைகள் நடைபெற்றன. பூஜ்ஜிய நேரத்தின் போது இந்தப் பிரச்சினையை எழுப்பிய மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நாட்டில் 2 சட்டங்கள் உள்ளன். ஒன்று அரசுக்கானது, மற்றொன்று எதிர்க்கட்சிகளுக்கானது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் முதல்வர்கள் மீதான ஊழல் குறித்து பிரச்சினை எழுப்பி னால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால், குஜராத் தைச் சேர்ந்த எங்கள் தலைவர் சங்கர் சிங் வகேலாவுக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. இமாச்சலப் பிரதேச முதல்வர் வீட்டு திருமணம் நடைபெற்றபோது, அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எங்கள் கட்சியினர் மீது மட்டுமல்லா மல் திரிணமூல் காங்கிரஸார் மீதும் இத்தகைய நடவடிக்கை தொடர்கிறது. அரசின் கொள்கை களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது” என்றார். இதற்கு திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
அவர்கள் பேச முற்பட்டபோது, அதை அவைத்தலைவர் அனு மதிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர் கள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியபோதும் இதே நிலை நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பாஜக மூத்த தலைவர் சுப்பிர மணியன் சுவாமி டெல்லி கோர்ட்டில் தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில், சோனியாவும், ராகுல் காந்தியும் வரும் 19-ம் தேதி ஆஜராக உத்தர விடப்பட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளு மன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியபோதும் இதே நிலை நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.