

கரோனா நோயாளிகளுக்கு தேவையான படுக்கை, ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதிகள் செய்ய கோரி பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியில் கரோனா பரவல்தீவிரமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், டெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு தேவையான படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதிகள் செய்ய கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் கேஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியில் உள்ள மத்திய அரசு மருத்துவமனைகளில் உள்ள10,000 படுக்கைகளில் 7,000 படுக்கைகளை கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று கடிதத்தில் பிரதமர் மோடியிடம் கேஜ்ரிவால் கோரியுள்ளார்.
நாட்டிலேயே கரானா வைரஸ் பரவல் மகாராஷ்டிராவில்தான் அதிகமாக உள்ளது. அங்குநோயாளிகளுக்கு உதவி தொழிற்சாலைகளில் இருந்துஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்கப்படும் என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.