Published : 18 Apr 2021 11:15 AM
Last Updated : 18 Apr 2021 11:15 AM

5-ம் கட்டத் தேர்தல்; 50 சதவீத  மையங்களில் வாக்குப்பதிவு நேரடி ஒளிபரப்பு

புதுடெல்லி

மேற்குவங்க மாநில 5-ம் கட்டத் தேர்தலில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் நேரடி ஒளிபரப்பு முறையில் வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டது.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு, 2 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 10 மாநிலங்களில் உள்ள 12 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு 15,789 மையங்களில் நடைபெற்றது. இவற்றில் 8266 மையங்கள் காணொலி மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டன.

மேலும், 2 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 10 மாநிலங்களில் உள்ள 12 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அமைதியான முறையில் நேற்று நடைபெற்றது.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் பெண்கள் அதிகளவில் வாக்களித்தனர். மாலை 5 மணி அளவில் 78.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. கரோனா தொடர்பான விதிமுறைகளை பின்பற்றியதற்காக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நன்றி தெரிவித்துள்ளது.

வேட்பாளர்கள் மறைவால் மேற்கு வங்கத்தில் உள்ள சம்செர்கஞ்ச் மற்றும் ஜங்கிப்பூர் தொகுதிகளிலும், ஒடிசாவில் உள்ள பிபிலி தொகுதியிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நாகாலாந்தில் உள்ள நோக்சென் (எஸ் டி) தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஒரே ஒரு வேட்பாளர் வேட்பு மனுவை தாக்கல் செய்ததால், அவர் போட்டியின்றி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

விதிகளின்படி அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் முதல் கட்ட சோதனையை வெற்றிகரமாக கடந்தன. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அவை சோதிக்கப்பட்டன. மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்பட்டது.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னர் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீண்டும் ஒருமுறை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சோதித்து பார்க்கப்பட்டன. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் நேரடி ஒளிபரப்பு முறையில் வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x