மேற்கு வங்க 5-ம் கட்ட தேர்தலில் 78.4 சதவீத வாக்குகள் பதிவு

மேற்குவங்கத்தில் நேற்று 5-ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது நாடியா மாவட்டம், சாந்திபூர் பகுதி வாக்குச்சாவடியில் புதுமண தம்பதியர் வாக்களித்தனர். இருசக்கர வாகனத்தில் வீடு செல்லும் முன்பாக மணமகனும் மணமகளும் விரலில் தீட்டப்பட்ட அழியாத மையை காண்பித்து மகிழ்ந்தனர். படம்: பிடிஐ

Updated on
1 min read

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் கடந்த மார்ச் 27-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 5-ம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.

மொத்தம் 45 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. 39 பெண்கள் உட்பட 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆங்காங்கே சிறிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில் 5-ம் கட்ட தேர்தலில் 78.4 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதனிடையே முதல்வர் மம்தா பானர்ஜியின் தொலைபேசி உரையாடலை பாஜக சட்டவிரோதமாக ஒட்டுகேட்டதாகவும் அக்கட்சி மீது உரிய எடுக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் நேற்று கடிதம் எழுதியது. முன்னதாக, மத்தியப் படையின் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர் உடல்களுடன் ஊர்வலம் செல்லும்படி கூச்பெஹார் திரிணமூல் தலைவரிடம் முதல்வர் மம்தா கூறியதாக ஆடியோ பதிவு ஒன்றை பாஜக வெளியிட்டது. இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் பாஜக தலைவர்கள் புகார் அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in